ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து, பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்டத்தை தழுவி பல மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் வருகிற ஜன., 7ல் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து மூன்று பாடல்கள் மற்றும் சிறு அளவிலான முன்னோட்டத்தை வெளியிட்டனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் டிச. 3ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தை உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




