100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! |

நடிகையும் தொகுப்பாளினியுமான, ரம்யா சுப்பிரமணியன், நியூயார்க்கில் உள்ள யூனிவர்சிட்டி ஒன்றில் ஊட்டச்சத்து தொடர்பான படிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனா காலத்தில் நமக்கும் இந்த சமூகத்திற்கும் உதவும் வகையில் ஏதாவது செய்ய நினைத்தேன். ‛பிட்னஸ்'சில் எனக்கு ஆர்வம் இருந்ததால், இந்த படிப்பை தேர்வு செய்தேன். என் கனவு எது என்றால், தென்இந்திய பெண்களை பொறுத்தரை உடல் தோற்ற அழகு, மாதவிடாய் பிரச்சனை, தைராய்டு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கிறது. இதுதொடர்பான புரிதலும், விளக்கமும் பலருக்கு கிடைப்பதில்லை. இந்தவிஷயத்தில் நான் நிறைய உதவ நினை்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.