வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது |

மாநாடு படத்தை அடுத்து சிம்புவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்துள்ளது. தற்போது கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்துதல போன்ற படங்களில் நடித்துவரும் சிம்பு, அடுத்தபடியாக நந்தா பெரியசாமி இயக்கும் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மாறுபட்ட கெட்டப்பில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.
இதற்கு முன்பு சிம்பு, ஹன்சிகா ஆகிய இருவரும் வாலு, மஹா படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் வாலு படத்தில் நடித்தபோது அவர்களுக் கிடையே காதல் உருவாகி அதேவேகத்தில் மறைந்து போனது. இருப்பினும் அவர்களுக்கிடையிலான நட்பு தொடர்கிறது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சிம்புவும், ஹன்சிகாவும் இணையப்போகிறார்கள்.