மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
இளம் வயதில் வேகமாக இசையமைத்து சாதனை படைத்தவர் லிடியன் நாதஸ்வரம். தற்போது மலையாளத்தில் மோகன்லால் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் சிங்கிஸ் அணியின் கேப்டனமுான மகேந்திர சிங் தோனியின் ஹெல்மெட், லிடியனுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து லிடியன் கூறுகையில், ‛‛சிஎஸ்கே அணியில் தோனி அணிந்த ஹெல்மெட் இது. அதேப்போல் அவர் கையெழுத்திட்டு கொடுத்த பேட் இது. இரண்டையும் எனக்காக கிப்ட்டாக கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி லிடியனின் தந்தை வர்ஷன் கூறுகையில், ‛‛துபாய் சென்றிருந்தபோது கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக்கை பார்த்தோம். நாங்கள் அங்கு சென்ற சமயம் தோனி சென்னை வந்துள்ளார். லிடியன் இல்லையா என கேட்டுள்ளார். பிறகு துபாயில் தொடர்பு கொண்டு அந்த ஹெல்மெட், பேட்டை தினேஷ் கார்த்திக் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார். விரைவில் தோனியை சந்திக்க உள்ளோம்'' என்றார்.