இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாள திரையுலகில் முதன்முறையாக சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் 'மின்னல் முரளி'. மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோதா படம் மூலம் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பஷில் ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
சூப்பர்மேன் கதை என்பதால் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப்படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக டிசம்பரில் வெளியாக உள்ளது. அந்தவகையில் பாலிவுட்டில் தனது படத்தை புரமோஷன் செய்யும் விதாமாக பிரபலங்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார் டொவினோ தாமஸ். சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை சந்தித்தார் டொவினோ தாமஸ். இந்தநிலையில் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பற்றி அவர் கூறும்போது, “எனது சினிமா பயணத்தை துவக்குவதற்கு முன்னரே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியவர் நீங்கள் தான். ஆனால் நேரில் சந்தித்தபோது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நீங்கள் எவ்வளவு எளிமையாக காட்சியளித்தீர்கள். அதனால் பணிவாக இருப்பதற்கும் கூட நீங்கள் தான் உந்துதலாக இருக்கின்றீர்கள்” என கூறியுள்ளார் டொவினோ தாமஸ்