பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவு களை வெளியிடுவதாக கூறி, நடிகை கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு , சம்மன் அனுப்பியது.
தனது துணிச்சலான கருத்துக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறார் நடிகை கங்கனா ரணவத், அதே அளவிற்கு அவருக்கு எதிர்ப்புகளும் உருவாகி வருகிறது. அவரது கருத்துக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கருத்தாக பார்க்கப்படுவதால் எதிர்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கங்கனா ரணவத் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டில்லியில் போராடிய சீக்கிய விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டதாக அவர் மீது டில்லி குருத்வாரா கமிட்டி போலீசில் புகார் அளித்தள்ளது. போலீசாரும் கங்கனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் டில்லியின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. சட்டசபையில் நேரில் ஆஜராகி தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்கு சட்டசபையின் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.