ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? | ஆர்யா 40வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அடுத்த படம் ஜெயிலர் 2 வா? : சந்தானம் அளித்த பதில் |

மம்முட்டி நடிப்பில் கே.மது இயக்கிய ஒரு சி.பி.ஐ டயரி குறிப்பு மலையாள படம் 1988ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதில் மம்முட்டியுடன் லிஸி, ஊர்வசி, சுரேஷ் கோபி, முகேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989ம் ஆண்டும், மூன்றாம் பாகம் சேதுராம அய்யர் சி.பி.ஐ என்ற பெயரில் 2004ம் ஆண்டும், 4ம் பாகம் நேரறியான் சி.பி.ஐ என்ற பெயரில் 2005ம் ஆண்டும் வெளியானது. தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இதன் 5ம் பாகம் தயாராகிறது.
இதிலும் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். மது இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ சேதுராம அய்யர் ஓய்வு பெற்று விடுகிறார். என்றாலும் போலீசால் தீர்க்க முடியாத ஒரு வழக்கை தீர்த்து வைக்க அவர் சிறப்பு அதிகாரியாக அழைக்கப்படுகிறார் என்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவில் ஒரே இயக்குனர், ஒரே ஹீரோ இணைந்து பணியாற்றும் 5வது பாகம் பட இதுதான் என்கிறார்கள்.