2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. அப்பாவின் பாதையில் சினிமாவுக்கு வந்துவிட்டார். தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் விருமன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தில் மதுரை பெண்ணாக நடிப்பதால் முறையாக மதுரை தமிழை பேசக்கற்றுக் கொண்டு நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே விருமன் படத்திற்காக பாவாடை தாவணி உடையில் எடுக்கப்பட்ட அதிதி ஷங்கரின் ஒரு போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலை யில், தற்போது ஒயிட் காஸ்டியூமில் தான் எடுத்துக்கொண்ட சில கியூட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அதிதி. இவை வைரலாகின.