''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தான் இயக்கி, தான் மட்டுமே படம் முழுக்க நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை தற்போது ஹிந்தியில் அபிஷேக்பச்சனை வைத்து இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்த நிலையில் அவரது முகநூலை யாரோ விஷமிகள் கடந்த ஞாயிறன்று ஹேக் செய்துள்ளனர். அதில், என் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவன் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில ஸ்வீட் எனிமிஸ் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் செய்ய சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள் என தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இரண்டு தினங்களுக்கு பிறகு பார்த்திபனின் முகநூல் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி, ‛‛முழுச்சிட்டிருக்கும்போதே கண்ணை பிடுங்கி காயிலாங்கடையில் வித்துட்டுப் போயிடுறாங்க பேடு ஹேக்கர்ஸ். ‛‛கெடுத்திடும் புத்தி இருவழி கத்தி. எடுத்தவனையே குத்தி காவு அது வாங்கிடாதோ? இரவின் நிழல்களில் நான் எழுதிய பாடல் வரிகள். திரும்பக் கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி. இனி இனிதே நட்பு தொடரும்'' என ரெதிவித்துள்ளார் பார்த்திபன்.