2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் காதல், கல்யாணம், பிரிவு என பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரே ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா. சில ஆண்டுகள் காதல், நான்கு வருட திருமண வாழ்க்கை என இருந்தவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தங்களது பிரிவு பற்றி அறிவித்தனர். அதன்பின் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.
திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக பிஸியாக இருந்த சமந்தா, தற்போது பாலிவுட் வரை செல்லும் ஆவலில் இருக்கிறார். சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால், அவருக்கு சமந்தா வாழ்த்து சொல்லவில்லை என சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
சமந்தா தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். கணவரைப் பிரிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா என பதிலுக்கு கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்.