அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கிறார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில் கொரோனா அறிகுறி தென்பட பரிசோதனையில் உறுதியானதை அடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கமல்ஹாசனிடம் போனில் உடல் நலம் விசாரித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதோடு விரைவில் குணமடைந்து அவர் வீடு திரும்பவும் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. முத்துராமன், பிரபு, சரத்குமார், சந்தானபாரதி, ஐசரி கணேஷ், ஏ.சி.சண்முகம், ராதாரவி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, பகத் பாசில், ஞானசம்பந்தன், ராஜேஷ், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களும் கமல் விரைவில் குணமாகி திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.