பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்து ஓடிடியில் நவ., 2ல் வெளியான படம் ‛ஜெய் பீம்'. இப்படத்திற்கு பாராட்டுகள் ஒருபக்கம் கிடைத்தாலும் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தி காட்சிகள், குறியீடுகள் இருந்ததாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும், பா.ம.வினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட படக்குழு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னையை தீர்க்க இயக்குனர் ஞானவேல் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், ஜோதிகா(தயாரிப்பாளர்) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.