தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் |
கோவாவில் நடந்து வரும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸிக்கு சத்யஜித் ரே விருது வழங்கப்பட்டது. முதுமை காரணமாக அவர் இந்த விருதை வாங்க நேரில் வரவில்லை. அவரது பிரதிநிதியிடம் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றது குறித்து மார்ட்டின் ஸ்கோர்செஸி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்யஜித் ரே பெயரில் விருது பெறுவது எனக்கு பெருமையாக உள்ளது என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. ரே என்னுடைய குருநாதர்களில் ஒருவர். எனது வாழ்க்கையில் பல ஆண்டுகளாக நான் பயிற்சி பெற்ற திரைப்பட இயக்குநர்களில் அவரும் ஒருவர்.
நான் பதேர் பாஞ்சாலியைப் பார்த்தபோதே அவருடைய படங்களின் மீதான என் காதல் தொடங்கிவிட்டது. அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்தது. அவர் படங்களில் இசையைப் பயன்படுத்தும் முறை என் படங்களுக்கான தாக்கத்தை உண்டாக்கியது.
நான் அவருடைய படங்களை எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன். நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்போது நான் அவற்றை நோக்கிச் செல்வேன். சத்யஜித் ரே மற்றும் இந்தியத் திரைப்படத் துறையினருக்கு நன்றி. நான் இந்தியாவுக்கு 1996ல் வந்தேன். இப்போது மீண்டும் வர விரும்புகிறேன்.
இவ்வாறு மார்ட்டின் ஸ்கோர்செஸி தெரிவித்துள்ளார்.