வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' |

சமீபத்தில் சிகாகோ நகரத்திற்கு காதி துணி அறிமுக விஷயமாக சென்றுவந்தார் கமல். இந்தநிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள கமல், தற்போது போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேசமயம் சிகாகோ சென்று வந்த கையுடன் கடந்த சனி, ஞாயிறு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடத்தி முடித்தார். அதாவது இந்த இரண்டு நாள் எபிசோடுகளின் படப்பிடிப்பு சனிக்கிழமை அன்றே முடிந்துவிடுவது வழக்கம். அதன்பின்னரே தனக்கு கொரோனா பாதிப்பு என கமலுக்கு தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில் மருத்துவமனையில் சிகிச்சை ஒரு வாரம், தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு வாரம் என இரண்டு வாரங்கள் கமல் ஓய்வெடுத்தே ஆக வேண்டும். அதனால் வரும் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலால் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தநிலையில் வரும் வாரம் மாற்று ஏற்பாடாக ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காரணம் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதேபோல இடையில் ஓரிரு வாரங்கள் அவர் படப்பிடிப்புக்காக செல்லவேண்டி இருந்தது. அந்தசமயத்தில் அவருக்கு பதிலாக அவரது மருமகள் சமந்தா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின் மீண்டும் நாகார்ஜுனா வந்து பொறுப்பேற்று கொண்டார், அதே பாணியை பின்பற்றி இங்கே கமலின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.