பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை,' படங்களை இயக்கி மணிகண்டன் அடுத்து இயக்கியுள்ள படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற வயதானவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்து கடைசியாக வெளிவந்த லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் அவருடைய இமேஜைக் குறைக்கும் படங்களாக இருந்தன. அந்தக் குறையைப் போக்குவதற்காக விஜய் சேதுபதி தற்போது 'கடைசி விவசாயி' படத்தை வாங்கி வெளியிட உள்ளார். இப்படம் தன்னுடைய இமேஜை மீண்டும் பெற்றுத் தரும் என விஜய் சேதுபதி பெரும் நம்பிக்கையில் உள்ளாராம்.
நேற்று இப்படத்தின் புதிய டிரைலர் வெளியானது. அதில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்பு இப்படத்தின் முதல் டிரைலரை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்கள். அதில் நல்லாண்டி தான் அதிக காட்சிகளில் இடம் பிடித்தார். அப்போது படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார். அதன்பின் இளையராஜாவுக்கும், மணிகண்டனுக்கும் பிணக்கு ஏற்பட்டதால் இளையராஜா படத்திலிருந்து விலகிவிட்டார்.
நேற்று வெளியான டிரைலருக்கு சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளனர். புதிய டிரைலரில் விஜய் சேதுபதி காட்சிகள்தான் அதிகம் இருக்கிறது. புதிய டிரைலர் நேற்று வெளியாகி இருந்தாலும் யு டியூபில் இன்னும் பழைய டிரைலரை நீக்காமல் தான் வைத்துள்ளனர்.




