குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்று தங்களது தனித் திறமையால் தனி முத்திரை பதித்தவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் மூவருமே ஒரே டிவியில் இருந்து சென்றவர்கள்.
அந்த வரிசையில் 'குத் வித் கோமாளி' புகழ் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தனது முதல் படமான 'சபாபதி' படத்தில் புகழ் இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமேதான் நடித்திருந்தார். அதிலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. அது ரசிகர்களுக்கு எமாற்றமாகிவிட்டது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது சந்தானம் முன்னெச்சரிக்கையாக என்னையும், புகழையும் எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்துள்ளது.
இருந்தாலும் புகழ் அடுத்தடுத்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் டிவியைப் போலவே ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்று நம்புவோம்.