கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படத்தில் ஏற்கனவே முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். தவிர நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பான் வினோத் ஜோஸ் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் டெல்லி கணேஷின் மகன் மகா மற்றும் மைமிங் கோகுல்நாத் ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்தவகையில் இந்தப்படத்தில் புதிதாக இணையும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
இந்தநிலையில் தற்போது விக்ரம் வேதா புகழ் வில்லன் நடிகரான ஹரீஷ் பெராடி இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்துவரும் ஹரீஷ் பெராடி, இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜின் டைரக்சனில் உருவான கைதி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.