இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார் விஜய். இந்த நிலையில் தனது 65வது படத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அந்த படம் துப்பாக்கி இரண்டு படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணத்தினால் விஜய் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வரகவன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது. அங்கு காஷ்மீர் தீவிரவாதிகளுடன் விஜய் மோதுவது போன்ற ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் விஜய் துப்பாக்கி படத்தை போலவே ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம். ஆனபோதிலும் காஷ்மீரில் அந்த சண்டை காட்சியை செட் அமைத்து படமாக்க முடியாத சூழல் இருப்பதால் அந்த காட்சியை ஜார்ஜியாவில் செட் போட்டு படமாக்கப்போவதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது இந்தப்படமும் துப்பாக்கி பட சாயலிலேயே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.