டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சின்னத்திரையில் மக்கள் மனதை கவர்ந்த டாப் ஸ்டார்ஸ் பட்டியலில் ரோஷினியும், சிவாங்கியும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் மக்களுக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான நபர்களாக மாறி வருகின்றனர். அதேபோல சினிமாவில் நடித்து கிடைக்கும் புகழை விடவும் சீரியலில் நடித்து இன்று மக்கள் மத்தியில் பிரபலமாவதும் புது டிரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் வரும் பிரபலங்களில் யார் யார் டாப் பட்டியலில் இடம் பெறுகின்றனர் என்ற ஒரு ஆய்வை சமீபத்தில் ஒரு நிறுவனம் நடத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகர்கள், சின்னத்திரை ஆளுமைகள் என்ற இருபிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முன்னணி தொலைக்காட்சியின் பிரபலங்கள் பலர் குறித்தும் கடந்த அக்டோபர் மாதம் மக்களிடையே ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சின்னத்திரை நடிகர்களில் முதலிடத்தை பாரதி கண்ணம்மாவின் ரோஷினி பிடித்துள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ரோஜா சீரியலின் நாயகி ப்ரியங்கா நல்காரியும், சுப்பு சூரியனும் பிடித்துள்ளனர்.
அதே போல் சின்னத்திரை ஆளுமைகளுக்கான டாப் ஸ்டார்ஸ் பட்டியலில் முதலிடத்தை விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவாங்கி தட்டிச் சென்றுள்ளார். மீதமுள்ள டாப் 5 இடங்களையும் கூட விஜய் டிவி பிரபலங்களே பிடித்துள்ளனர். இரண்டாவது இடத்தை புகழ், மூன்றாவது இடத்தை மா கா பா ஆனந்த், நான்காவது இடத்தை ப்ரியங்கா, ஐந்தாவது இடத்தை கோபிநாத் ஆகியோர் பிடித்துள்ளனர்.