'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டிவியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து முன்னணி நாயகனாக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் வருவதற்கு முன்பே முன்னணி நாயகர்களாக இருந்த சிலரை தனது வெற்றிகள் மூலம் ஓவர்டேக் செய்துவிட்டார். அதோடு அவர்களது சம்பளத்தை விடவும் அதிகமாக வாங்குகிறார் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல்.
தற்போது நடித்து வரும் 'டான்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை 'ஜதி ரத்னலு' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். 21வது படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதால் 35 கோடி சம்பளம் என்கிறார்கள். இப்படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கப் போகிறாராம்.
விஜய், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தமிழ், தெலுங்கு என்ற கான்செப்டில் நுழைய உள்ளார்.