தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
கொலம்பியா பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜோன் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா, பெனடிக்ட் கம்பர்பாட்ச் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்'. இப்படத்தின் டிரைலரை இந்திய நேரப்படி நேற்று காலையில் வெளியிட்டார்கள். 24 மணி நேரத்திற்குள்ளாக இந்த டிரைலர் யு டியூபில் 31 மில்லியன்களைக் கடந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியானது. அது இதுவரையிலும் 77 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதுவரையில் மொத்தமாக அனைத்து டிஜிட்டல் பார்வைகளுடன் 355 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. டீசருக்குக் கிடைத்த பார்வைகளை விட தற்போது டிரைலருக்கு இன்னும் அதிகமான பார்வைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் டிசம்பர் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகிறது.