பிரபல திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார் | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டப்பிங் பணிகளை துவங்கிய தனுஷ் | சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் | கே.ஜி.எப் 2 வெற்றியால் அலட்சியம் - பிரசாந்த் நீல் | குபேரா படத்தின் கதைக்களம் வெளியானது | விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவு : நெகிழ்ச்சியில் மகிழ்திருமேனி | ஹீரோவின் தலையீட்டால் படத்திலிருந்தே வெளியேறிய ஸ்ருதிஹாசன் | சட்டப்படி நடவடிக்கை - அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு | சன்னி லியோனுக்கு மாதம் 1000 உதவி தொகையா? - மோசடி புள்ளி சிக்கினார் | ஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸிற்கு படம் இயக்கும் வெங்கட் பிரபு |
நடன இயக்குனரும், நடிகருமான ஹரிகுமார் இயக்கி உள்ள தேள் படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பிரபுதேவாவுடன் நடனம் ஆடும் வரை வேறு படங்களில் ஆட மாட்டேன் என்று சம்யுக்தா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் பாடலை படமாக்கும்போது நான் விபத்தில் சிக்கி ஓய்வெடுத்து வந்தேன். மைசூரில் பைக் ஓட்டும் போது எதிர்பாராதவிதமாக அது நடந்து விட்டது. பிரபுதேவா அவரது பிஸியான நேரத்திலும் என்னை ஓய்வெடுக்க சொல்லி, ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இப்போது வரையிலும் நான் 8 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்திலும் எனக்கு டான்ஸ் இல்லை. பிரபுதேவாவுடன் முதல் வாய்ப்பை நான் மிஸ் செய்து விட்டேன். இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக்கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது என்றார்.