மைசூரு பண்ணை வீட்டில் தங்க நடிகர் தர்ஷனுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி | 'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: குழந்தைகளுக்கு பரிசளித்த மோகன்லால் | எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நடிக்க விரும்பும் சரத்குமார் | காலையில் அறிமுகமான மஞ்சு வாரியரின் கையால் மாலையில் விருது பெற்ற விஜய் சேதுபதி | நான் சுப்ரீம் ஸ்டாரா? : எனக்கே தெரியாது என்கிறார் சரத்குமார் | சினிமா தெரியாத கிராம மக்கள் உருவாக்கிய படம் 'பயாஸ்கோப்' | 'மிஸ்டர் பாரத்' ரஜினி பட கதையல்ல : இயக்குனர் விளக்கம் | அல்லு அர்ஜுன் வீடு மீது கல்வீசி தாக்குதல் | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள் | பிளாஷ்பேக் : பவுத்த மத பின்னணியில் உருவான 'அசோக்குமார்' |
சென்னை : சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு எதிராக வன்னியர்கள் போர்க்கொடி துாக்கிய நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பக்ரீத் படத்தை எடுத்த எம்10 தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் வெளியிட்ட அறிக்கை: படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், அதை சீர்குலைக்காமல் வைப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை என்பதை, வேதம் புதிது படம் எடுத்தவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து, படம் எடுத்ததை கண்டித்து, அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல், குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல், சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தால் கண்டிக்க வேண்டியவரே.
படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் சூர்யாவின் சாதியையோ அவருக்கு ஆதரவா உள்ளவர்களின் சாதி பற்றியோ ஒரு படைப்பு வரும் பட்சத்தில் அது தமிழ் சமூகங்களுக்கு இடையேயான சாதிய கலவரங்களுக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது என்பதை நாமும், சூர்யாவும் புரிந்து கொள்ள வேண்டும்.
சுதந்திரம் என்ற பெயரில், ரோட்டில் நிர்வாணமாக நடப்பது, இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அதுபோன்ற அசிங்கம் தான், சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம். ஆகச்சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும், புனைவு பெயர்களும் எதற்காக? குறியீடுகளை நீக்கி விட்டோம் என சப்பைக்கட்டு கட்டுவது, சிறந்த கலைஞரின் சிறந்த பண்பு அல்ல.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் ஜெயம்பீம் பட விவகாரம் தொடர்பாக சூர்யா, பா.ம.க., இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. சென்னை, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் போலீசார் பாதுகாப்புக்காக செல்கின்றனர்.