இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமான இவர் இப்போது பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். பொதுவாக நகரத்து கதை தொடர்பான வேடங்களிலேயே நடித்துள்ள இவர் முதன்முறையாக கிராமத்து ஸ்டைலுக்கு மாறி உள்ளார். இதற்காக தன்னை கிராமத்துக்காரன் போன்று மாற்றிக் கொண்டு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.
‛‛நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக் கொள்வது மிக முக்கியம். வித்தியாசமான தோற்றம் புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரும். அடுத்து இரண்டு வெப்சீரிஸ்களில் இந்த தோற்றத்திலேயே நடிக்கிறேன் என்கிறார் கணேஷ்.
இதுப்பற்றி கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ‛‛கொரோனா ஊரடங்கில் மொத்த சினிமா துறையையும் புதிதாக மாற்றிவிட்டது. 10 ஆண்டுகளை கடந்து சினிமாவில் பயணிக்கும் நானும், என்னை புதுப்பித்துக் கொள்ள நினைத்தேன். தமிழ் நாட்டிற்கு எது சிறப்பு என்று யோசித்தபோது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்தேன். முழுக்க என்னை கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இந்த போட்டோஷூட்டை செய்தோம். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியம். நம்மை அனைவரும் ஒரே மாதிரி பார்க்கும் நேரத்தில், வித்தியாசமான தோற்றம் ஒரு புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரும் என்றார்.
அடுத்ததாக இரண்டு வெப்சீரிஸ் தொடர்களில் இந்த புதிய தோற்றத்தில் இவர் நடிக்கவுள்ளார்.