விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
உலகளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் பன்மொழியில் தயாராகும் லைகர் படத்தில் அறிமுகமாகிறார். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே மற்றும் கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பூரி ஜெகன்நாத் இயக்குவதோடு சார்மி, கரண் ஜோகர், அபூர்வா மேத்தா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. அங்கு விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் பங்குபெறும் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இதுப்பற்றி, ‛‛இரும்பு மனிதர் மைக் டைசனை நேருக்கு நேர் சந்தித்தபோது.... இந்த மனிதர் அன்பானவர். இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். அதிலும் இந்த தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும்'' என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.