என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகை காஜல் அகர்வால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டுக்காக இந்தப்படம் காத்துக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படம் திடீர் விபத்து, கொரோனா, ஷங்கர் - லைகா மோதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. பிரச்சினைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில் காஜல் கர்ப்பமாக இருப்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும் படத்திலிருந்து விலகி இருப்பதாகவும் தகவல் வெளியானது. படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதால் படத்துக்கான நாயகியை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது திரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.