ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் | ‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ |
பாய்ஸ் படத்தில் 5 நடிகர்களில் ஒருவராக அறிமுகமாகி தெலுங்கு பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக மாறியவர் தமன். தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படத்துக்கு தமன் தான் இசை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளம் மூலம் பதில் அளித்துள்ளார் தமன். அதில் ஒரு அஜித் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தமன், " அஜித்துடன் வேலை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நபர்" என்றும் பதில் அளித்துள்ளார்.
மேலும் ஒரு விஜய் ரசிகர், "தளபதி 66க்கு இசை நீங்களா?" என கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள தமன், இன்னும் முடிவாகவில்லை என பதிலளித்துள்ளார்.