அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

ஹிந்தியில் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை தழுவி உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‛‛ஆதிபுருஷ். ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதாவாக கிர்த்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங் நடித்துள்ளனர். பான் இந்திய படமாக 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மொத்தம் 103 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் 100 நாட்கள் பிரபாஸ் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் 100 நாள் படப்பிடிப்பு மற்றும் பிரபாஸின் கடைசி நாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இப்போது இயக்குனர் ஓம் ராவத், ‛‛மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. மறக்க முடியாத அருமையான பயணம். இந்த படத்தில் நாங்கள் படைத்துள்ள மேஜிக்கை உங்களுக்கு காண்பிக்க காத்திருக்க முடியவில்லை என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.