விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. இதில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில் ரஜினிக்கு தங்கை கீர்த்தி சுரேஷா என்ற விமர்சனமும் வருகிறது.
இது குறித்து கீர்த்தி சுரேஷின் அம்மாவும் ரஜினியின் முன்னாள் நாயகியுமான மேனகா சுரேஷ் கூறியிருப்பதாவது, எனக்குப் பிடித்திருக்கிறது. 40 ஆண்டுக்கு முன்பு அவருடன் நெற்றிக்கண்' படத்துல ஜோடியாக நடித்தேன். ரஜினி அப்போது எப்படி இருந்தாரோ, அதை விடவும் அழகாவும், ஆக்டிவாகவும் இருக்கிறார். விமர்சனம் பண்றவங்க வயசு, ரசனைனு நிறைய விஷயங்கள். அதனால் விமர்சனம் பார்த்துட்டு படம் பார்க்காதீங்க. ரஜினி பொண்ணு மாதிரி இருந்துகிட்டு கீர்த்தியை அவருக்கு தங்கச்சியா நடிக்கலாமானு கேக்குறாங்க.
சினிமா என்பதே நிழல் தான். இது வெறும் நடிப்பு, இதுல ஏன் வயது, அது இதுனு தேவையில்லாத விஷயங்களைப் போட்டு குழப்பணும்? அவர் மனதிற்கு ஹீரோவாக தெரியும் வரை நடிக்கட்டும், இதுல யாருக்கு என்ன பிரச்னை? தங்கச்சி என்ன, இன்னொரு படத்துல அவருக்கு ஜோடியா நடிக்கக் கேட்டாலும் கீர்த்தி நடிப்பார்'' என தெரிவித்துள்ளார்.