டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் வருகிற டிசம்பர் மாதத்தில் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது. விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி, விவேக்,மோகன் ராஜா, கருபழனியப்பன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனபோதிலும் டிசம்பரில் எந்த தேதியில் படம் வெளியாகிறது என்பது குறித்த தகவல் அந்த போஸ்டரில் இடம் பெறவில்லை. டிசம்பர் வெளியீடு என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். மேலும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் வெளியான மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்விகளை கொடுத்த நிலையில் இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் ஹிட் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.