Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'2 சீரியல்ல இருந்து என்ன தூக்கிட்டாங்க' கண்ணீர் விட்ட நடிகை

01 நவ, 2021 - 14:28 IST
எழுத்தின் அளவு:
Actress-Veena-Venkatesh-removed-from-two-serial

சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ், அவர் நடித்து வந்த இரண்டு சீரியல்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை வீணா வெங்கடேஷ் சித்தி 2 சீரியலிலும், விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் டிவி சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் வேறொருவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சித்தி 2 சீரியலிலிருந்தும் வீணா வெங்கடேஷை கழட்டி விட்டுள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள வீணா வெங்கடேஷ், 'சித்தி 2-வில் சுப்புலெட்சுமியாகவும், காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சியாகவும் இரண்டு அருமையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இந்த இரண்டு சீரியல்களும் எனக்கு குடும்பம் போல இருந்தது. ஆனால், திடீரென எனக்கு கொரோனா வந்து விட்டது. சீரியல் குழுவினர் எனக்காக கொஞ்சகாலம் காத்திருந்தார்கள். ஆனால், எனக்கு டெஸ்ட் முடிய இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் மட்டும் அவர்கள் காத்திருந்தால் நான் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருப்பேன். ஆனால், அவர்கள் எனக்கு பதில் வேறு நடிகர்களை மாற்றிவிட்டார்கள். அந்த இரண்டு தொடர்களையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நிச்சயமாக புது புராஜெக்டில் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இன்ஸ்டா ரீல்ஸில் டுவிஸ்ட் வைத்த பவித்ரா : ஷாக்கான ரசிகர்கள்இன்ஸ்டா ரீல்ஸில் டுவிஸ்ட் வைத்த ... 'உடம்பு முழுக்க எண்ணெய்' உடன் பிரகதி போட்டோஷூட் 'உடம்பு முழுக்க எண்ணெய்' உடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vena Suna - Coimbatore,இந்தியா
02 நவ, 2021 - 19:16 Report Abuse
Vena Suna அடப்பாவமே...கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர்கள். பெண்கள் அழுதா தாங்க முடியவில்லை.பாவம் வருமானம் போகுமே.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
02 நவ, 2021 - 14:01 Report Abuse
கௌடில்யன் தாராளமா நடிக்க தயாரா இருந்தா வாய்ப்பு நெறய கிடைக்குமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in