பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
சிபி ராஜ் கதாநாயகனாகவும் அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் மாயோன். கோயில் சிலைகள், புரதான சின்னங்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. அதன் பின்னணியில் உருவாகும் படம் இது.
ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். என்.கிஷோர் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இப்படத்திற்காக புதுக்கோட்டை அருகில் மாய மலையில், பாதாள அறை, புரதான சிலைகள், புரதான சின்னங்கள் போன்றவை ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பத்மநாபபுரம் கோட்டை, மகாபலிபுர சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை, கீழடி போன்ற கோட்டைகள் ஒவ்வொன்றிலும் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன.
இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் புதையல் தேடி வருபவர்கள் சந்திக்கும் அதிசயமும், அதிர்ச்சியும் சுவாராஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், என இப்படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கும். புதிய முயற்சியுடன் பல சுவாரஸ்யங்களும் இப்படத்தில் காத்திருக்கின்றன. என்றார்.