பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

தொண்ணூறுகளில் பூந்தோட்ட காவல்காரன், நல்லவன் உட்பட விஜயகாந்தின் படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானவர்தான் மலையாள நடிகை வாணி விஸ்வநாத். தெலுங்கில் விஜயசாந்தி போல மலையாளத்தில் அதிக படங்களில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 1௦௦ படங்களுக்கு மேல் நடித்த இவர், கடந்த 2௦௦2ல் மலையாள வில்லன் நடிகர் பாபுராஜை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து நீண்ட நாட்கள் ஒதுங்கியிருந்தார்.
அதன்பின் அவ்வபோது ஒன்றிரண்டு படங்களில் நடித்த இவர், 2௦09ல் தனது கணவர் பாபுராஜ் இயக்கிய 'பிளாக் டாலியா' படத்தில் நடித்தார். 2011ல் தயாரிப்பாளராக மாறி தனது கணவர் இயக்கிய மனுஷ்ய மிருகம் படத்தை தயாரித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் நல்லதொரு வாய்ப்புக்காக காத்திருந்தவர், தற்போது தி கிரிமினல் லாயர் என்கிற படத்தில் மீண்டும் தனது கணவர் பாபுராஜூடன் இணைந்து நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜிதின் ஜித்து என்பவர் இயக்கும் இந்தப்படத்தை வாணி விஸ்வநாத்தே தயாரிக்கவும் செய்கிறார்.