'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாமுக்கு எப்போதுமே தென்னிந்திய மொழி படங்களில், குறிப்பாக மலையாள படங்கள் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. ஜேஏ என்டர்டெய்ன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வரும் ஜான் ஆப்ரஹாம், கடந்த வருடம் மலையாளத்தில் வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றினார். இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவும் உள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க தற்போது ஒருபடி மேலேபோய் மலையாளத்தில் நேரடியாக ஒரு படம் தயாரிக்கும் வேலையிலும் இறங்கிவிட்டார் ஜான் ஆப்ரஹாம். இந்தப்படத்திற்கு மைக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. தண்ணீர் மாத்தன் தினங்கள் படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்க, ரஞ்சித் சஜீவ் கதாநாயகனாக நடிக்கிறார். விஷ்ணு சிவபிரசாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.