Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு எதிரான சர்ச்சை விளம்பரம் : ஆமீர்கானுக்கு குவியும் கண்டனம்

23 அக், 2021 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Aamir-khan-anti-firecracker-advertisement

கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு டயர் தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ஆமீர்கான் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் தெருவில் விளையாடும் சிறுவர்களை அழைத்து ஆமீர்கான் 'சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல, சாலைகள் கார்களுக்காக' என்று அறிவுரை சொல்கிறார்.

இந்த விளம்பரம் இந்துக்களின் தீபாவளி பண்டிகைக்கும், அவர்களது நம்பிக்கைக்கும் எதிரானது. இதில் வேண்டும் என்றே இஸ்லாமியரான ஆமீர்கான் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். பரபரப்பு பப்ளிசிட்டிக்காக இந்துக்களை புண்படுத்துவதா என்ற விளம்பரத்துக்கும், அதில் நடித்துள்ள ஆமீர்கானுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே டயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் ஆமிர்கான் தெருக்களில் பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கும் உங்கள் விளம்பரத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. பொதுமக்களின் பிரச்சினைகள் மீதான உங்கள் அக்கறைக்குப் பாராட்டுகள். ஆனால், இதேபோல சாலைகளில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்சினையையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது வெள்ளிக்கிழமை மற்றும் இதர விழா நாட்களில் தொழுகையின் பெயரில் முஸ்லிம்களால் சாலைகள் மறிக்கப்படுவது.

பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்துக்களுக்கு எதிரான நடிகர்கள் குழு ஒன்று எப்போதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் சமூகத்தில் இருக்கும் தவறுகளைப் பற்றிப் பேசுவதில்லை.

இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்தில் படம் தயாரிக்கும் ஜான் ஆப்ரஹாம்மலையாளத்தில் படம் தயாரிக்கும் ஜான் ... ரீமேக்காகும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே ரீமேக்காகும் தில்வாலே துல்ஹனியா லே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

sridhar - Chennai,இந்தியா
25 அக், 2021 - 13:11 Report Abuse
sridhar சாலைகள் தொழுகை நடத்துவதற்காக அல்ல . கார்களுக்காக …என்ன சரியா .
Rate this:
unmaitamil - seoul,தென் கொரியா
24 அக், 2021 - 18:43 Report Abuse
unmaitamil போக்குவரத்தை தடுத்து நடுரோட்டில் நமஸ் செய்பவர்களை என்ன செய்வது ???
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
24 அக், 2021 - 15:05 Report Abuse
Narasimhan இந்துக்களுக்கு சூடு சுரணை என்றாவது இருந்ததுண்டா
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24 அக், 2021 - 04:26 Report Abuse
NicoleThomson சமீப காலமாக இது போன்று மூக்கை நோண்டும் வேளையில் பல விளம்பரங்கள் இதற்க்கு தீர்வுதான் என்ன?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25 அக், 2021 - 00:47Report Abuse
NicoleThomsonஅமீர் கான் ஒரு நல்ல இந்திய சிட்டிசன் ஆக இருந்துள்ளாரா? இரு குழந்தைகள் போதும் என்று இந்த சட்டம் கூறும் வேளையில் ஏற்கனவே மூன்று ,இந்த லட்சணத்தில் இவன் மற்றையோருக்கு புத்தி கூறுவான்...
Rate this:
23 அக், 2021 - 15:37 Report Abuse
சாம் இந்திய நாடு இந்துக்களுக்கு மட்டுமே...
Rate this:
Raffik - Chennai,இந்தியா
27 அக், 2021 - 17:32Report Abuse
Raffikஅமெரிக்காவுல இருக்கிற அவால முதல்ல கூப்பிடு...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in