மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
சமந்தா நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதே அளவுக்கு சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த வெப் சீரிஸைசை பாலிவுட்டை சேர்ந்த ராஜ்-டிகே என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அடுத்ததாக இயக்க உள்ள வெப்சீரிஸில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே சொல்லப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மும்பையில் நடைபெறும் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.
இந்தநிலையில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபல நடிகர்களின் படப்பிடிப்பு அருகருகே நடைபெற்றால் ஒருவரை ஒருவர் சென்று சந்தித்துக் கொள்வது இப்போது புதிய டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது. தற்போது 'சுப்' எனும் இந்திப்படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். அந்த வகையில் அருகில் விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு, அங்கே விசிட் அடித்துள்ளார் துல்கர் சல்மான். இதேபோல சமீபத்தில் கூட மும்பையில் துல்கர் சல்மானின் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு, நடிகர்கள் அரவிந்த்சாமியும் குஞ்சாக்கோ போபனும் விசிட் அடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.