அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
பிரபல பாலிவுட் நடிகை பூஜா பேடி. பழம்பெரும் நடிகர் கபீர் பேடியின் மகள். விஷ்கன்யா படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
51 வயதான பூஜா பேடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு மட்டும் எப்படி கொரோனா வரவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் ஒரு வழியாக எனக்கும் கொரோனா வந்துவிட்டது.
2 நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலாக இருந்தது. நான் ஏதோ அலர்ஜி என்று முதலில் நினைத்தேன். அதன் பிறகு பரிசோதனை செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது தெரிய வந்தது. தேவையான சிகிச்சையை எடுத்து வருகிறேன். எனக்கு மட்டும் அல்ல, என் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நான் என் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைதான் நம்பியிருக்கிறேன். நான் தடுப்பூசி போடுவது இல்லை என்கிற முடிவில் இருக்கிறேன். இயற்கையான முறையில் குணமடைய விரும்புகிறேன். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். எச்சரிக்கையுடன் இருப்போம். பயப்பட வேண்டாம். என்று பூஜா தெரிவித்துள்ளார்.