நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… |
தமிழ் இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். பான்-இந்தியா படமாக உருவாக உள்ள இப்படத்தின் பூஜை கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
'இந்தியன் 2' படத்தை இன்னும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டுத்தான் ராம் சரண் படத்திற்குச் சென்றுள்ளார் ஷங்கர். சமீபத்தில் 'இந்தியன் 2' படத் தயாரிப்பாளரை ஷங்கர் நேரில் சந்தித்துப் பேசி 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் மீண்டும் ஆரம்பிக்கிறேன் என உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் அப்படி செய்யாமல் ராம் சரண் படம் இயக்கச் சென்றுவிட்டார். இதனால், 'இந்தியன் 2' தயாரிப்பாளர் கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
எனவே, ராம் சரண் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை புனேவில் வரும் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை முடித்த பிறகுதான் 'இந்தியன் 2' பக்கம் ஷங்கர் வருவாரா அல்லது இடையில் வருவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.