ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
நடிகர் விஜய் உடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வருகைக்கான பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், உள்ளாட்சி தேர்தல் மூலம் விஜய் தனது தொண்டர்களுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். அடுத்து வரப் போகும் தேர்தலிலும் பச்சைக் கொடி காட்டினால் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் விஜய் நேரடி அரசியலுக்கு வரக்கூடாது. தமிழக மக்கள் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கின்றனர். அதனை சிறிது காலம் அவர் அனுபவிக்க வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தாம் சிறு பாதை போட்டுக் கொடுத்ததாகவும், அதை மிகப்பெரிய நெடுஞ்சாலையாக விஜய் மாற்றிக் கொண்டார் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். எதிர்காலத்தில் விஜய் தன்னைவிட வேகமாக அரசியல் குறித்து முடிவெடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் விஜய் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்று நம்புவதாகவும், ஏனென்றால் தற்போதைய ஆட்சி பழிவாங்கும் ஆட்சி இல்லை எனவும் எஸ்.ஏ.சந்திர சேகர் கூறியுள்ளார்.
சமீபத்தில் கூட விஜய் தன்னை அழைத்து ஒருமணி நேரம் பேசினார். அப்போது சில பொதுவான விஷயங்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று எஸ்ஏசி சூசகமாக தெரிவித்துள்ளார்.