பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தும், மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனும் காதலிப்பதாக செய்தி பரவுகிறது. அனிருத் இரு தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதுவே டிரெண்ட் ஆனது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, அனிருத்தின் லேட்டஸ்ட் காதலி மாளவிகா மோகனன் தான் என்று பேசத் துவங்கிவிட்டனர்.
கடந்த ஆண்டு அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அனிருத்தும், கீர்த்தியும் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகளோ அவர்கள் காதலர்கள் என்றார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு மாளவிகாவை காதலியாக்கிவிட்டார்கள். மேலும் சிலர், மாளவிகா தன் வலது கையை பின்னால் வைத்திருப்பதை பார்த்து கையில் சரக்கு பாட்டிலா இருக்குமோ என்று கிளப்பிவிட்டுள்ளனர்.