நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடனான தனது திருமண முறிவு குறித்த செய்தியை வெளியிட்ட சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் பிசியாகி விட்டார். தசரா பண்டிகையை முன்னிட்டு மிக முக்கியமானவர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றும் இன்றும் என அடுத்தடுத்து சமந்தா நடிக்கவுள்ள இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாக இருக்கின்றன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார் சமந்தா. இந்தப்படத்தை சாந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அறிமுக இரட்டை இயக்குனர்களான ஹரிஷ் நாராயணன்-ஹரிசங்கர் இருவரது டைரக்சனில் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.