'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சென்னை எழும்பூர் அருகே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பார்வையிட்டார். அவரது பேட்டி:'போலீஸ் மியூசியம்' என்றால் அதில் என்ன; எப்படி இருக்கும் என்ற ஆசை இருந்தது. நான் காக்கிச் சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தார். அதனால், போலீஸ் மீது தனி ஈர்ப்பு உண்டு. நம்மூரில் போலீஸ் துறை ஆரம்பத்தில் இருந்து, அதன் பரிமாணம் எப்படி வளர்ந்தது என்பதை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். அதிலும், அதை விளக்கியது அருமை.
தெரிந்த விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னும் ஒரு கதை உண்டு.போலீசாக நினைப்பவர்கள், போலீசால் கவரப்பட்டவர்கள் அனைவரும், இந்த மீயூசியத்தை காண வேண்டும். அதுமட்டுமின்றி, போலீசாக எப்படியெல்லாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறியலாம்.காவல் துறை மற்றும் சிறைத்துறை பற்றி, இங்கு அருமையாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவிலே சிறந்த இடம் என்பதை, இதை பார்த்த போது புரிந்தது. குழந்தைகளை கண்டிப்பாக அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.