முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு |

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் கம்பம் மீனா. வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பிரபலமான துணை நடிகையாக இன்று வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த கிராமத்து பெண்ணின் சாதனை பின்னணி என்ன?
நாச்சிமுத்து மீனா என்ற இயற்பெயர் கொண்ட மீனாவுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. அதன்பின் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். குடும்ப வறுமை காரணமாக எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி செய்ய ஆரம்பித்தார். தைரியமான பெண்ணாக வலம் வந்த அவர், அப்போதே சுற்று வட்டாரங்களில் பிரபலமான பெண்ணாக இருந்தார்.
இதற்கிடையில் இயக்குநர் பாரதிராஜா 'தெற்கத்திபொண்ணு' என்கிற சீரியலை தேனி மாவட்டத்தில் இயக்கி வந்தார். அப்போது மீனாவை சந்தித்த இயக்குநர் அவரை முதன் முதலாக அந்த சீரியலில் நடிக்க வைத்தார். கிராமத்து வட்டார மொழியில் பேசி நடிப்பில் கலக்கிய மீனாவுக்கு சின்னத்திரை ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. தொடர்ந்து போராடிய மீனா தனது திறமையால் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார்.
இன்று கம்பம் மீனா என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் அறியப்படும் நாச்சிமுத்து மீனா இதுவரை தமிழில் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் நடுத்தர மக்களின் மனங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டார். பத்தாம் வகுப்பில் தந்தையை இழந்து இன்று விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கம்பம் மீனாவின் வாழ்க்கை பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது.