நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு! | சினிமாவை விட வெளியில் தான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன்: ஷ்ரத்தா ஸ்ரீநாத் | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் பொம்மரிலு | பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் தந்தையிடம் அடி வாங்கிய ராம்சரண் | நடிகையின் குற்றச்சாட்டுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த நடிகர் ஆசிப் அலி | மெய்யழகன் சண்டைக்காட்சி பற்றி கார்த்தி உடைத்த சஸ்பென்ஸ் | நல்ல படத்தை மிஸ் செய்ததற்கு வருத்தப்படுகிறேன் - ரகுல் ப்ரீத் சிங் | ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! | ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! |
தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான அணியும், நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.
தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சுவும், பிரகாஷ் ராஜும் போட்டியிட்டனர். இதில் பிரகாஷ் ராஜ் தோல்வியைத் தழுவினார். பிரகாஷ் ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற மொழி, இன பிரச்சாரமே பிரகாஷ் ராஜின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே தன்னை ஒரு விருந்தினராகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி சங்கத்திலிருந்து விலகப் போவதாகக் கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இதைத் தொடர்ந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர் விஷ்ணு மஞ்சுவுக்குத் தனது ராஜினாமா குறித்த செய்தியை அனுப்பியுள்ளார்.
இதற்கு விஷ்ணு, நன்றி உங்கள் முடிவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் என்னைவிட மூத்தவர். வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அந்த இரண்டையும் நாம் ஒன்றாகவே பாவிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் ஒருவர் நீங்கள். எனக்கு உங்கள் யோசனைகள் தேவை. நாம் இணைந்து பணியாற்றுவோம். நீங்கள் உடனே இதற்கு பதில் சொல்ல வேண்டாம். கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். நாம் பேசுவோம். எனக்கு உங்களைப் பிடிக்கும் மாமா. தயவு செய்து அவசரப்பட வேண்டாம்" என்று பதிலளித்துள்ளார்.