பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி |
தெலுங்கில் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த், சர்வானந்த், அதிதிராவ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மகா சமுத்திரம். இந்தப் படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார் சித்தார்த்.
அதில் துணிச்சலாகக் கருத்துகள் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு சித்தார்த் பதில் கூறும்போது, “எனது 8 வயதிலிருந்தே நான் பொதுவெளியில் பேசி வருகிறேன். விஸ்வரூபம் வெளியீடு சமயத்தில் கமல்ஹாசனுக்குப் பிரச்னை ஏற்பட்டபோது தமிழக அரசுக்கு எதிராகப் பேசினேன். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மனப்பான்மைக்கு எதிராக நான் என்றுமே எதிர்த்துப் பேசியிருக்கிறேன்.
நான், சரி என்று நினைக்கும் விஷயத்தைப் பேசுவதால் வெறுக்கப்படுவதே மேல் என்று நினைக்கிறேன். என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது. மறைக்க எதுவுமில்லை. எனக்கு பயமுமில்லை" என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.