அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ச்சியடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு மட்டுமில்லாது தமிழிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் லெப்டினன்ட் ராம் என்கிற படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். ஆனால் ராஷ்மிகா அதில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி உள்ளதாக தெரிகிறது.
காரணம் இந்த படத்தில் ஏற்கனவே மிருனாள் தாக்கூர் என்பவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னொரு முக்கியமான, அதேசமயம் கொஞ்ச நேரமே வந்து போகின்ற இன்னொரு நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் ராஷ்மிகாவை அணுகி உள்ளார்களாம்.
அவரது காட்சி சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் கூட அனைத்தும் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட இருக்கின்றனவாம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றாலும், இப்போதுதான் முன்னணி நடிகையாக மாறி இருக்கும் நிலையில், அதில் நடிக்கத்தான் வேண்டுமா என்று தயக்கம் காட்டுகிறாராம் ராஷ்மிகா.