நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதாகஅறிவிக்கப்பட்டது. கடைசிநாள் படப்பிடிப்பு முடிவடைந்து அவர்கள் ஸ்டுடியோவிற்குள் இருந்து வெளியே வரும் வீடியோவைகூட வெளியிட்டிருந்தனர். அதோடு பிக்அப் ஷாட்களை தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
அதனால் அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படத்திற்காக படமாக்கப்பட்ட சில காட்சிகளில் தனக்கு திருப்தி இல்லாததால் மீண்டும் அந்த காட்சிகளை படமாக்கப்போகிறாராம் ராஜமவுலி. அதற்காக இன்னும் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்தபடப்பிடிப்பு நடைபெறுகிறது.