ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப நடிகர்களை அவ்வப்போது வம்புக்கு இழுப்பது வழக்கம். அந்தவகையில் லேட்டஸ்ட்டாக அல்லு அர்ஜுன் பற்றி புகழ்வது போல ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் வர்மா. விஷயம் இதுதான். சமீபத்தில் சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று அவரது குடும்ப வாரிசு நடிகர்கள் அனைவரும் அவருக்கு நேரிலேயே சென்று வாழ்த்துக்களை கூறினார்கள். ஆனால் அல்லு அர்ஜுன் நேரில் செல்லவில்லை.
இதை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள வர்மா, “.அல்லு அர்ஜுனின் புத்திசாலித்தனம் என்பது அவர் சிரஞ்சீவி போன்றவர்களின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்வதில் இல்லை. ஏனென்றால் அவர் தானே சுயம்புவாக தன்னை உருவாக்கி கொண்ட நட்சத்திரம்.. அதனால் பவன் கல்யான், வருண் தேஜ், ராம்சரண் போல சிரஞ்சீவியின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள கூடாது. காமெடி நடிகர் அல்லு ராமலிங்கையாவின் பேரனாக இருந்து சிரஞ்சீவியின்' குடும்ப வாரிசுகளை எதிர்த்து வெற்றி பெற்றிப்பது தான் உண்மையான வெற்றி.. அந்தவகையில் ஒரிஜினல் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு பிறகு இப்போதைய மெகாஸ்டார் அல்லு அர்ஜுன் தான் ” என கூறியுள்ளார்..
உண்மையிலேயே அல்லு அர்ஜுனை புகழ்கிறாரா..? இல்லை, சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் வளர்ந்த அல்லு அர்ஜுன் சிரஞ்சீவியின் பிறந்தநாளை கூட ஒரு பொருட்டாக மதிகவில்லையே என குத்திக்காட்டுகிறாரா...? இது உண்மையிலேயே புகழ்ச்சியா அல்லது கிண்டலா என்பது அவருக்கே வெளிச்சம்.




