ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்தார் இப்போதும் தொடர்ந்து படங்களில் நடிக ஆர்வம் காட்டி வரும் ஆஷா சரத் சமீபத்தில் வெளியான 'த்ரிஷ்யம்-2விலும் நடித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, 'பீஸ்' என்கிற படத்தில் தன்னெழுச்சியாக உயர்ந்த தொழிலதிபராக நடித்து வருகிறார் ஆஷா சரத். 'வீட்டிலே ஊனு' என்கிற பெயரில் சிறிய அளவில் உணவகம் ஆரம்பித்து, அதை தானே, ஆட்டோவில் ஏற்றி பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்து முன்னேறுபவராக நடித்துள்ளார் ஆஷா சரத்.. இதற்காக ஆட்டோ ஒட்டி பழகிய ஆஷா சரத், படப்பிடிப்பின்போது எவ்வித பயமும் இன்றி ஆட்டோ ஒட்டியதை பார்த்து படக்குழுவினரே வியந்து போனார்களாம்.