'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

கொரோனா இரண்டாவது அலை ஒருபக்கம் தீவிரமடைந்து வந்தாலும், மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னட பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சுதீப். ஆனால் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மோகன்லால் சனி ஞாயிறுகளில் போட்டியாளர்களை தெறிக்கவிட்டுக் கொண்டு இருக்க, கன்னடத்திலோ கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு லீவு போட்டுவிட்டார் சுதீப்.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு வாரம் அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் சேனல் நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்று கடந்த வார நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கவில்லை. இந்தநிலையில் தனது உடல்நிலை சீராகிவிட்டதாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிபிட்டுள்ள சுதீப், இந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தெரிவித்துள்ளார்.




